
தனது நண்பர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தையின் தேர்தல் பிரசாரத்துக்காக நண்பரிடம் மாலக சில்வா பணம் கோரியிருக்கிறார்.
இதன்போது அவரும் சுவரொட்டிகளை அச்சிட்டுத் தர சிறிய தொகை பணத்துக்கு இணங்கியுள்ளார். எனினும் ரீ-சேர்ட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபா அவசியம் என மாலிக சில்வா நண்பரிடம் கோரியுள்ளார்.
இதனை தன்னால் தரமுடியாது என்று அந்த நண்பர் கூறிவிட்டு மாலக சில்வாவை படிப்படியாக தவிர்க்க முயற்சித்தபோது மாலக சில்வா தமது பேஸ்புக்கில் தமது நண்பரை காணவில்லை என்றொரு பதிவை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை அறிந்த மாலக சில்வாவின் நண்பர் குறித்த பதிவை அகற்றி விடுமாறு கோரியபோது மாலக சில்வா அதனை அகற்ற முடியாது எனக்கூறி நண்பருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கடுவெல நீதிமன்றத்தில் நேற்று (17) பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நண்பருக்கும் அவருக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலை செவிமடுத்த பின்னர் மாலக சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.