சமுர்த்தி உதவி பெறுவோருக்கான நட்செய்தி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமுர்த்தி உதவி பெறுவோருக்கான நட்செய்தி!!

சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டு வந்த வட்டி இல்லாத கடன் வழங்கும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி கடன் வழங்கும் செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.

அந்த வேலைத்திட்டம் தொடர்பில் தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வட்டியில்லாத கடனாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அதே வேளை ,அதற்கு மேலதிகமாக நான்கு வீத வட்டியில் 50,000 ரூபா கடன் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.