இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 
ஏற்ற இறக்கம் நிகழ்வதாலும், இலங்கையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலுமே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 100,000 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

22 கரட் தங்கத்தின் பெறுமதி 93,000 ரூபாவாக காணப்படுவதுடன், செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22 கரட் தங்க நகையின் இன்றைய விலை 97,000 ரூபாவாகும்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி 70,000 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆகஸ்ட் மாத அளவில் தங்கத்தின் விலை சாதாரண நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post