
அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,782 ஆக அதிகரித்துள்ளது.
கட்டாரில் இருந்து வந்த 04 பேருக்கும் மற்றும் கந்தகாடு மற்றும் சேனப்புற புனர்வாழ்வு நிலையங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 08 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2,106 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலையில் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

