மீண்டும் ஒரு சிறுத்தை வலையில் சிக்கி மீட்பு; நுவரேலியா தோட்டப்பகுதில் சம்பவம்!

மீண்டும் ஒரு சிறுத்தை வலையில் சிக்கி மீட்பு; நுவரேலியா தோட்டப்பகுதில் சம்பவம்!

நுவரேலியா - கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட நிலையில் சிறுத்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி பிரபாத் கருணதிலக தெரிவித்தார்.

இன்று (12) அப்பகுதியின் தேயிலை மலைப்பகுதியில் விலங்கு வேட்டைக்காக விரிக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்குண்ட நிலையிலிருந்த சிறுத்தையை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.

சிறுத்தையை கண்ட பிரதேசவாசிகள் கினிகத்தனை பொலிஸார், நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வனவிலங்கு கால்நடை பிரிவு அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து வலையில் சிக்குண்ட சிறுத்தையை மயக்க மருந்து ஊசியேற்றி உயிருடன் பிடித்தனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை மேலதிக சிகிச்சைக்காக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது 6 வயதான பெண் சிறுத்தை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலங்கு வேட்டைக்காக வலை விரித்த நபர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

-Thinakaran

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post