விடுதலைப் புலிகள்; இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவிய இருவர் கைது!!

விடுதலைப் புலிகள்; இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவிய இருவர் கைது!!

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக படகில் யாழ்ப்பாணத்துக்குள் குடியமர முற்பட்ட இரண்டு நபர்கள் உள்பட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் ஒருவர் கடுமையான சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்ததாவது,

காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்பு கடற்படைப் பிரிவு நேற்று (11) காலை மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது தொண்டமனாறிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதியில் டிங்கிப் படக்கு ஒன்றில் பயணித்த போதே அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர முயன்றது தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர்கள் 21 முதல் 52 வயதுக்கு உள்பட்டவர்கள். மற்றைய இருவரும் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவாச பிரச்சினை மற்றும் நெஞ்சு வலி காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியாவிலிருந்து வந்த இருவரில் ஒருவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

மற்றைய மூன்று பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சுகாதார நடைமுறைகளின் படி பாதுகாப்பான மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் PCR பரிசோதனையும் முன்னெடுக்கப்படும் என்றார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post