30 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்!

30 நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்!

ஹோமாகம பகுதியில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு இராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கந்தக்காடு - புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் இராணுவ வீரர்கள் இருவரும் பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post