மேல் மாகாணத்தில் மேலும் 100இற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு!!!

முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post