அலுத்கமகேவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு பதிலளித்த குமார் சங்கக்கார!

இன்றைய சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த முன்னால் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பதில் அளித்த முன்னால் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார,

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் போது இந்தியாவுடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியினை பண உழல் செய்து, போட்டியினை விட்டுக் கொடுத்ததாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர் கூறியவற்றை உறுதி செய்யும் முகமாக இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அலுத்கமகே சம்பவம் தொடர்பிலான அவரது ஆதாரங்களை ஐ.சி.சி.க்கு சமர்ப்பிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் சங்கக்கார பதிலளித்திருந்தார்.
Previous Post Next Post