புகலிடம் கோரும் (asylum) இலங்கை பிரஜைகளுக்கு எதிராக தீர்ப்பளித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

Sri Lankan Asylum in USA
அமெரிக்காவில் புகலிடம் கோரும் (asylum) புலம்பெயர்ந்தோருக்கு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை மேல்முறையீடு செய்ய முடியாது என்று உச்ச அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 7 க்கு 2 என்ற முடிவுக்கு அமைய இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ஆரம்ப புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாராவது ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டிய சட்ட நடைமுறையான Habeas Corpus எனப்படும் “ஆட்கொணர்வு நடுவர் பேராணை” முறை புகலிடம் கோருவோருக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக San Diego எல்லையைத் தாண்டிய இலங்கையர் விஜயகுமார் துரைசிங்கம் எனப்படும் நபர் வழக்கு தாக்கல் செய்தார். அவர் அரசாங்கத்தின் துன்புறுத்தலுக்குள்ளானதற்கான நம்பகமான ஆதாரங்களை அவரால் வழங்க முடியாமல் போயுள்ளது.

குறித்த இலங்கையர் தனது புகலிடம் நிராகரிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு குடிவரவு நீதிபதியைக் கேட்டுக் கொண்டார், ஆனால் நீதிபதி எல்லை முகவர்களுக்கு ஆதரவாக இருந்தார். 9வது சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் புலம்பெயர்ந்தோருடன் பக்கபலமாக இருந்த நிலையில் அவரது வழக்கை அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் எடுத்துக் கொள்ளும் வரை அவர் இலங்கைக்கு திரும்புமாறு கூறப்பட்டது.

இது தொடர்பான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இறுதியாக புகலிடம் கோரும் புலம்பெயர்ந்தோருக்கு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை மேன்முறையீடு செய்ய முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post