இம்முறை நாம் பிரியாணி மற்றும் வாக்குகள் இரண்டினையும் எடுப்போம் - பிரதமர்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இற்கு பெறும்பாலானமுஸ்லிம்களின் வாக்குகள் கிடைப்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“முன்பு ஒரு பழமொழி இருந்தது, நாம் பிரியாணியினை எடுப்போம், ஆனால் எங்கள் வாக்குகள் மட்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தான்என்றார்கள். ஆனால் இன்று ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன பிரியாணி மற்றும் வாக்குகள் இரண்டையும் பெற்றுக் கொள்ளும் என்றுதற்போது நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.” என்று நேற்று (29) தெஹிவளையில் இடம்பெற்ற முஸ்லிம் கூட்டணி சந்திப்பின் போதுபிரதமர் தெரிவித்தார்.


ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிற்கு கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும், ஒரு சில குழுக்கள்வாக்களித்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைகளை முஸ்லிம் சமூகத்தினர் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும் என்றும்தெரிவித்தார்.

கொரோனா தொற்றுதலால் இறந்த முஸ்லிம் நபரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும்இல்லை, அம்முடிவுகள் அனைத்துக் இலங்கை வைத்திய அமைப்பினரின் முடிவுகள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். வைத்தியர்களின் கடைசி முடிவுக்கு அப்பால் எங்களால் செல்ல முடியாமல் இருந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் மற்றும் பதியூதீன் ஆகியோர் இவற்றை அரசாங்கத்தின் தலையில் போடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி பிரதம வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கைகோர்க்கதயாரகவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Previous Post Next Post