கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளை; சந்தேகநபரை மடக்கி பிடித்த பொலிஸ் டிபென்டர் விபத்தில் பலி! (வீடியோ இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளை; சந்தேகநபரை மடக்கி பிடித்த பொலிஸ் டிபென்டர் விபத்தில் பலி! (வீடியோ இணைப்பு)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ரூபா 79 இலட்சம் கொள்ளை சம்பவத்தில் சந்தேக நபரான வைத்தியரை கைது செய்ய உதவிய அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடப்பெற்று இரண்டு நாட்களுக்கு பின் (11) வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பம்பலப்பிட்டிய, ஹெவ்லொக் வீதியிலுள்ள சம்புத்த ஜயந்தி இல்லத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால், டிபென்டர் வாகனமொன்று ​​அவரது மோட்டார் சைக்கிளில் மோதி விபத்திற்குள்ளாக்கி தப்பிச்சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (14) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதான சித்தும் அளகப்பெரும எனும் அரச புலனாய்வு பிரிவின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

தேசிய வைத்தியசாலையில் கடந்த 09ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் வந்த சந்தேகநபரான குறித்த வைத்தியர், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு, சம்பளம், மேலதி சேவைக்கான கொடுப்பனவிற்காக வைத்திருந்த ரூபா 79 இலட்சம் கொள்ளைச் சம்பவத்தில் குறித்த கான்ஸ்டபிளுடன் மற்றுமொரு புலனாய்வு சேவையிலுள்ள கான்ஸ்டபிள் ஆகியோர் சந்தேகநபரை பின்தொடர்ந்து சென்று, சந்தேகநபரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான ஹொரணையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், மற்றுமொரு வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றும் நிலையில், விசேட வைத்திய நிபுணத்துவ பயிற்சிக்காக தேசிய வைத்தியசாலையில் பட்டப் பின்படிப்பு பயிற்சிக்காக இணைக்கப்பட்ட வைத்தியர் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபரான வைத்தியருக்கு எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.