"ஒரு சிலரின் நடவடிக்கையால் விரக்தி அடைந்துள்ளேன்! அரசியலிலிருந்து ஓய்வு பெறவும் தீர்மானித்துள்ளேன்!" -ரோஸி சேனாநாயக்க

"ஒரு சிலரின் நடவடிக்கையால் விரக்தி அடைந்துள்ளேன்! அரசியலிலிருந்து ஓய்வு பெறவும் தீர்மானித்துள்ளேன்!" -ரோஸி சேனாநாயக்க

ரோஸி சேனாநாயக்க
கட்சியிலிருந்தோ மேயர் பதவியிலிருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. அவ்வாறானதொரு தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவும் இல்லை என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு சிலரின் நடவடிக்கையால் கட்சி அரசியலில் விரக்தியுற்றிருக்கின்றேன். அதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் தீர்மானித்திருக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தோ கொழும்பு மாநகர சபை மேயர் பதவியில் இருந்தோ என்னை யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ கட்சியோ அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. ஒருசில சமூக வலைத்தலங்களே இது தொடர்பான பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

அத்துடன் கடந்த முதலாம் திகதி கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே எனக்கு எதிரான பொய் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post