வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

வவுனியா, கனகராயன்குளம், A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – அரசடி வீதி, நல்லூரைச் சேர்ந்த 19 வயதான ஜெ. திசிகாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் யாழ். பளை வீதியைச் சேர்ந்த 20 வயதான அவருடைய நண்பருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், விடுமுறை காரணமாக தனது நண்பருடன் யாழ்ப்பாணம் செல்லும் வழியிலேயே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post