மின்சார கட்டணம் தொடர்பான புகார்களை ஒன்லைன் மூலம் தெரிவிக்கலாம்!

மின்சார கட்டணம் தொடர்பான புகார்களை ஒன்லைன் மூலம் தெரிவிக்கலாம்!

மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களின் நலன்கருதி முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளவும், சேவையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆன்லைன் (Online) வசதிகளை ஏற்படுத்தியுள்ளன.

இதன்மூலம் மின்சார பாவனையாளர்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு நேரடியாக வருகைதரவேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறு ஆணைக்குழுவை இலகுவாக தொடர்பு கொள்ளலாம் என்பது தொடர்பான ஊடக அறிக்கையோ ஒன்று இன்று ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாவனையாளர்கள்  மற்றும் பிற சேவை பயனாளர்களை Online மூலமாக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்கள் முறைப்பாடுகளை தீர்க்க மின்சார பாவனையாளர்களுக்கு ஆன்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார பாவனையாளர்களின் தீர்க்கப்படாத முறைப்பாடுகளை பின்வரும் வழிகளில் ஆணைகுழுவிற்கு சமர்ப்பிக்கலாம்.

வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 0112392607 அல்லது 0112392608 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

மேலும் 0770126253 வாட்ஸாப் (WhatsApp), வைபர்(Viber) மற்றும் இமோ (IMO) மூலமும்,
https://www.pucsl.gov.lk என்ற இணையதளத்தின் மூலமும்,
[email protected] மின்னஞ்சல் மூலமும்,
www.facebook.com/pucsl எனும் முகநூல் (Facebook) மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மின்சார கைத்தொழில் மற்றும் மசகு எண்ணெய் சந்தை ஒழுங்குறுத்துகையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள்தங்கள் சேவைகளுக்கு, 0770126250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழவின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு அதிகாரியை சந்திப்பதற்கான அவசியம் காணப்படும் பட்சத்தில் அதற்கான தினத்தையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0112392607 மற்றும் 0112392608 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். இன்றேல் [email protected] அல்லது https://www.facebook.com/pucsl என்ற முகநூல் பக்கத்தினூடாக தொடர்புகொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

உங்களது வேண்டுகோளுக்கு இணங்க பணியாற்றும் பிரிவினர் உங்களை சந்திப்பிப்பதற்கான நேரம் குறித்து விரைவில் அறியத்தருவர். இன்றேல் இணைய சேவை ஊடாக தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் 0772943193 அவர்களை தொடர்புகொள்ளவும்.

கமிஷனுக்கு இதுவரை மின்சார நுகர்வோரிடமிருந்து கிட்டத்தட்ட 700 புகார்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post