இலங்கை ஆராய்ச்சியில் புற்றுநோய்க்கான ஒரு மருந்து!! (வீடியோ இணைப்பு)

இலங்கை ஆராய்ச்சியில் புற்றுநோய்க்கான ஒரு மருந்து!! (வீடியோ இணைப்பு)

இலங்கையில் ஒரு குழு ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான ஒரு நல்ல தீர்வைக் கொண்டு வந்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழு 2012 ஆம் ஆண்டளவில் புற்றுநோய் மருந்துக்கான ஆய்வினை தொடங்கியது.

இந்த ஆய்வினை மேற்கொள்ள, அவர்கள் உலர்ந்த மண்டலத்தில் தோன்றும் ஃபுல்விஃபார்ம் ஃபோராமினிஃபெரா எனும் அரியவகை காளானைப் பயன்படுத்துகின்றனர்.

மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, 2015ஆம் ஆண்டில் அதற்கான அழற்சி எதிர்ப்பு கலவையை (Anti-inflammatory compound) கண்டுபிடித்தனர்.

பின்னர் குறித்த ஆராய்ச்சிக்கான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பிரித்தெடுத்தலுக்கான (Anti-cancer properties and extraction) தங்கள் காப்புரிமை (Patent) பெற்றுக்கொண்டனர்.

எனினும் இந்த ஆராய்ச்சி தொடர்பில் இலங்கையில் காப்புரிமை இன்னும் வழங்கப்படவில்லை.

உலகளவில், ஆண்டுதோறும் 22 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 25,000.

மேலும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் படி, ஆண்டுக்கு 14,000 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post