கடிதங்களுடன் கஞ்சா விநியோகிக்கும் தபால்காரர்; பொலன்னறுவையில் சம்பவம்!

பொலன்னறுவை - பராக்கிரம சமுத்திர பகுதியில் அமைந்துள்ள துணை தபால் நிலையத்தின் தபால்காரர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக அஞ்சல் விநியோகிக்கும் அதே நேரம் கஞ்சா விநியோகித்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் வசம் இருந்து 100 க்கும் மேற்பட்ட கஞ்சா பாக்கெட்டுக்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை குற்றவியல் புலனாய்வுத்துறையின் அதிகாரிகளால் மாறுவேடம் இட்டு அம்பகஸ்வெவ பகுதியில் இந்த  சோதனை நடத்தப்பட்டபோதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
Previous Post Next Post