பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தெரிவாகும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்பரிசோதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் .


முதல் நாடாளுமன்ற அமர்வுகளில், பீ.சீ.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியாகிய உறுப்பினர்கள் மட்டுமேபங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post