கோவிட்-19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட முன்பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதன்படி, குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்குவதற்காக முன்பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு பெற்றோர்கள் அரசிடம் கோரியதை அடுத்து, இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.
முன்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
வல்லுநர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் 50% மாணவர்களுக்கு கீழ் அடிப்படையில் முன் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
விரைவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.