முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிகளவான விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என விஸ்டன் கிரிக்கெட் மாத சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

உலகில் முன்னணி கிரிக்கெட் ஆய்வு நிறுவனமான கிறிக்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சஞ்சிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 30 டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்துள்ளது. இதில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முன்னணியில் உள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விஸ்டன் கிரிக்கெட் மாத சஞ்சிகையின் விற்பனை பணிப்பாளர் சேம் ஸ்டோ, “ நாங்கள் 2000ஆம் ஆண்டு முதல் தரவுகளை சேகரித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் அவர் 573 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2010ஆம் ஆண்டு வரை அவர் விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த காலப் பகுதியில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக ஜேம்ஸ் ஹென்டர்சன் மாத்திரமே உள்ளார். அவர் 584 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 151 போட்டிகளில் விளையாடியுள்ளார் எனவும் சேம் ஸ்டோ குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post