இன்று மூவர் இனம்காணப்பட்டனர்; 22 பேர் குணம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,036 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான், குவைத் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 364 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதோடு, இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post