
நேற்று (23) மொனராகலை பகுதியில் ஹோட்டல் ஒன்றுக்கு பக்கத்தில் இருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து பதினையாயிரம் ரூபா பணத்துடன் பணப்பை ஒன்று பெண்ணொருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது.
குறித்த பெண்ணின் கணவர் ஒரு குத்தகை வசதியின் கீழ் பெறப்பட்ட அந்த முச்சக்கர வண்டியை ஒரு நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு அதில் கிடைக்கப்பெற்ற பணத்துடன் வீட்டிற்கு திரும்பும் போதே இது நிகழ்ந்துள்ளது.
உணவு வாங்குவதற்காக வேண்டி பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு தனது கணவருடன் சென்றபோது அவர் தனது பணப்பையை மறந்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் காசு கொள்ளைபோனதை அடுத்து, மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை பதிவு செய்தனர், இதனை தொடர்ந்து காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு குறித்து ஹோட்டலுக்குச் சென்று ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
பின்னர் ஹோட்டலின் CCTV காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் பணப்பையைத் திருடிய நபர் தெளிவாகக் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்று (24) காலை பொலிஸாரிடம் தானாகவே சரணடைந்துள்ளார்.
பின்னர் விசாரணையின் போது, அவர் அப்பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும், தனிப்பட்ட தேவைக்காக ஹோட்டலுக்கு வந்தபோது முச்சக்கர வண்டியின் பணப்பையை கண்டு திருடி விட்டு சென்றதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
வீட்டுக்கு சென்றபின்னர் ஒருவித பீதி ஏற்பட்டதாகவும்
பின்னர் அவர் பயந்து பொலிஸ் நிலையத்திற்கு விறைந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நாளை மொனராகலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.