ஷொட்கன் மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!!

பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவிடிகம பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட "ஷொட்கன்" ரக துப்பாக்கி ஒன்றும் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 02 தோட்டாக்களும், 02 வாள்கள் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவொன்று மற்றும் பூகொடை பொலிஸ் நிலைய அதிகாரிக்ள குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 41 வயதுடைய சந்தேகநபர் ஓவிடிகம, பூகொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர் இன்று (26) பூகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post