கோழி இறைச்சிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோழி இறைச்சிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்!

அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

அதிக விலைக்கு கோழி இறைச்சியை வர்த்தகர்கள் விற்பனை செய்வது தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அதன் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தோலுடன் கூடிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் அதிகபட்ச சில்லறை விலையாக 430.00 ரூபாவும், தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் அதிகபட்ச சில்லறை விலையாக 500.00 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படல் வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.