சுதந்திர சதுக்க வளாகத்தில் உயிரிழந்த நபர் பற்றி தகவல் வெளியானது!


கொழும்பு சுதந்திர சதுக்கத்தின் அருகாமையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் பற்றிய விபரங்களை பொலிஸார்வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 06:45 மணியளவில் உயிரிழந்த நபர் மிலாகிரிய பிரதேசத்தினை சேர்ந்த 64 வயதுடைய நபர் எனவும், அவரின் உடலின்அருகாமையில் மைக்ரோ வகையான துப்பாக்கியொன்றும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரஜீவ ஜயவீர எனும் இவர் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் முன்னாள் முகாமையாளரரும், Colombo Telegraph இணையத்தளஎழுத்தாளராகவும் இருந்துள்ளார். மேலும் ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழல் தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


மேலும் உயிரிழந்த நபர் சுகயீனமுற்றும் இருந்துள்ளதோடு தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவரின் உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கும் இடை நிறுத்தவும்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

Previous Post Next Post