இலங்கையில் HCL Technologies நிறுவன கிளை; 1,500 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் HCL Technologies நிறுவன கிளை; 1,500 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

HCL Technologies Sri Lanka
உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL Technologies (HCL) இலங்கையில் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதாக இன்று (17) அறிவித்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கிய முதல் பதினெட்டு மாதங்களுக்குள், புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்காக 1,500 இற்கும் மேற்பட்ட புதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்க HCL திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் HCL இன் வணிக மற்றும் மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கம் இலங்கையின் உள்நாட்டு திறமைக் குழாத்தை உலகளாவிய பணிகளுக்குப் பயன்படுத்துவதாகும்.

"உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL Technologies இப்போது இலங்கையில் பணியமர்த்தல் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் சபை தலைவரான சுசந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

"HCL தனது உலகளாவிய விநியோக மையத்தை இலங்கையில் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ள பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு படியாகும். HCL ஆல் நாட்டில் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும், இலங்கை மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே உலகளாவிய பணிச் சூழலை அடையப்பெற முடியும் என்றும் நான் நம்புகிறேன். இது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், மேலும் பல நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப மையமாக இலங்கை விரைவில் வளர்ச்சி காணும் என்று நம்புகிறேன்." என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

HCL Technologies நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைமை அதிகாரியான ஸ்ரீமதி சிவசங்கர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

"எங்கள் செயல்பாடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்கனவே தொடங்கியுள்ளதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், இலங்கையின் மிகவும் திறமையான மற்றும் உயர் தொழிற்தகைமை கொண்ட நபர்களை வேலைக்கு அமர்த்தவும், அவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தாய்நாட்டிலேயே உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் அவர்கள் பணிபுரியும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறோம்.

உலகெங்கிலும் உள்ள எங்கள் Fortune 500 மற்றும் Global 2000 வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் சேவைகளை வழங்குவதில் இலங்கையில் உள்ள எங்கள் விநியோக மையம் முக்கிய பங்கு வகிக்கும்." என தெரிவித்தார்.

HCL, கடந்த பெப்ரவரி 2020 இல் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் கைகோர்த்து அதன் உள்நாட்டு நிறுவனமான Global 2000 (PVT) LTD நிறுவனத்தை ஆரம்பித்து பிராந்தியத்தில் அதன் முதல் விநியோக மையத்தை அமைத்தது. இந்த நிறுவனம் மூலம், பயன்பாடுகள் மற்றும் கணினி ஒருங்கிணைப்பு சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றில் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு HCL தனது சேவைகளை வழங்கும்.

உள்நாட்டில் திறமைசாலிகள்  குழாத்தை விருத்தி செய்வதற்கும் பயிற்சியளிப்பதற்கும் உள்நாட்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கற்கை நிறுவனங்களுடன் தீவிரமாக கூட்டுப்பணிகளை முன்னெடுப்பதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் HCL தனது பணி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தையும் செயல்படுத்தும்.

புதியவர்களுக்கு, HCL நுளுழுகுவு பயிற்சி மற்றும் பணியமர்த்தல் திட்டத்தின் மூலம் க.பொ.த உயர்தரம், உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர்களை பணியமர்த்துவதில் HCL கவனம் செலுத்தும். இந்நிறுவனம் உள்நாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடத்தில் இருக்க உதவும், மேலும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரை தாயகம் திரும்பி வந்து இந்த வளர்ச்சி மாற்ற பயணத்தில் அங்கம் வகிக்குமாறும் அழைப்பு விடுக்கும்.  நிறுவன கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றுவது மற்றும் முன்னிலை பணியாளர்களுக்கு ஈடுபாடு. இடமளிப்பு மற்றும் வலுவூட்டல் ஆகிய அடிப்படை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும் அதன் ideapreneurshipTM கலாச்சாரத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தும்.

“வாடிக்கையாளர்களுடனான எங்கள் உறவு வர்த்தக ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. ideapreneurshipTM என்பது வணிகத்தால் இயக்கப்படும் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கத்தின் தனித்துவமான கலாச்சாரம் என்பதுடன், இதில் ஒவ்வொரு பணியாளருக்கும் தனது ஆக்கபூர்வ சிந்தனையை முன்வைக்கும் உரிமம் உள்ளது என்பதன் ஊடாக இலங்கையில் எமது ஊழியர்களை வலுவூட்டி, ஊக்குவிப்போம். எங்கள் ideapreneurshipTM கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம், உள்நாட்டு திறமைசாலிகள் குழாத்தின் உதவியுடன் எங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று HCL Technologies நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைமை அதிகாரியான ஸ்ரீமதி சிவசங்கர் அவர்கள் மேலும் கூறினார்.

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வெளிச்சேவையமர்த்தல் (ITO) மற்றும் வணிக செயல்பாடுகள் முகாமைத்துவம் (BPM) சந்தையில் விரும்பப்படும் ஒரு நாடாக இலங்கை வேகமாக வளர்ந்து வருகின்றது. தகவல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சேவைகளுக்கான (ITEs) கடல்கடந்த சேவைகளை வழங்குவதற்கும், நிதி மற்றும் கணக்கியல், சட்டம், காப்புறுதி, வங்கிச்சேவை மற்றும் தொலைதொடர்பாடல்கள் தொடர்பான சேவைகளுக்கும் மிகச் சிறந்த இடமாக இந்நாடு காணப்படுகின்றது.

HCL Technologies Lanka (Pvt) Ltd பயன்பாடுகள் (Applications) மற்றும் கணினி ஒருங்கிணைப்பு சேவைகள், உள்கட்டமைப்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் செயல்முறை தொழிற்பாடுகள் அடங்கிய துறைகளில் பெறுமதிமிக்க சேவைகளை வழங்கும்.

வேலை வாய்ப்புக்கள் தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை கீழ்காணும் இணைப்பில் பெற்றுக்கொள்ளவும். www.hcltech.com/careers

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.