கஞ்சிப்பான இம்ரானின் தந்தை கத்திக்குத்து; முழு விபரம்!

இன்று (17) மாலை 6.30 மணியளவில் மாளிகாவத்தை, சத்தர்ம மாவத்தைக்கு அருகில் கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட கூரிய ஆயுதத்தினாலான தாக்குதலில், குறித்த நபர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த 65 வயதான இப்ராஹிம் நாஜித், பிரபல போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 'கஞ்சிப்பானை' இம்ரான் என்பவரின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காயமடைந்த நிலையில் தற்போது தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர், அவரது முச்சக்கர வண்டி மற்றும் தாக்குதலை மேற்கொண்ட கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள்ளார்.

தாக்குதல் நடத்தியதன் காரணம் தொடர்பாக எவ்வித தகவலும் இன்னும் அறியப்படவில்லை. மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post