கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சர்வதேச இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் வாரியம்(ICC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது அணியில் இருக்கும் வீரரா அல்லது ஓய்வு பெற்ற வீரரா என்ற தகவலினை அமைச்சர் வெளியிடவில்லை.