
குறித்த பத்திரிகையாளர் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொட்ண்டமான் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த பத்தரமுல்ல பிரதேசத்தில் இருக்கும் அவரின் வீட்டுக்கும் அவரின் கட்சி காரியாலத்திற்கும் சென்று வந்துள்ளார்.
அமைச்சரின் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டதும் குறித்த பத்திரிகையாளருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் மக்கள் சுகாதார பரீட்சாளர் தெரிவித்தார்.
அப்பத்திரிகையாளருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் பீ. சீ. ஆர். பரிசோதனைகளை செய்துள்ளார்.
பி. சீ. ஆர். பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகளை செய்யவுள்ளதாகவும், மீண்டும் ஒரு முறை பி. சீ. ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளப்படவும் உள்ளார். மற்றைய நபர்கள் தங்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.