சுகயீனம் காரணமாக CID க்கு வரமுடியாது; கருணா தெரிவிப்பு!

சுகயீனம் காரணமாக CID க்கு வரமுடியாது; கருணா தெரிவிப்பு!

கருணா அம்மான் உடல்நலக் குறைவால் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

கருணா அம்மானை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை விட கருணா அம்மான் மிகவும் ஆபத்தானவர் என காரைத்தீவு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் “ஆம், நான் கொரோனாவை விட ஆபத்தானவனே..! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த காலப்பகுதிகளில் இராணுவத்தின் மாபெரும் காவலறனாக செயற்பட்டு வந்த ஆணையிரவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதல்களினால் கைப்பற்றியபோது 2,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம், அதேபோன்றே கிளிநொச்சியிலும் இவ்வாறான பல சம்பவங்கள் பல காணப்படுகின்றன.” என கருணா அம்மான் தெரிவித்த கருத்து பாரதூரமானது என தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியது மாத்திரமின்றி வழக்குத் தாக்கல் செய்யுமாறும் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரினர்.

இதற்கமையவே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே தனது சட்டத்தரணியின் ஊடாக மேற்குறிப்பிட்ட சுகயீனம் காரணத்தை தெரிவித்து தற்சமயம் சமூகமளிக்க முடியாது என அறிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post