
சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை Wallpaperராக செட் செய்தால் சில ஆண்ட்ராய்டு போன்கள் கிராஷ் ஆகின்றனவாம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த வால்பேப்பரைப் பயன்படுத்தினால் முதலில் Samsung போன்கள் செயலிழந்துவிடுவதாக ‘Ice universe’ என்ற தொழில்நுட்பச் செய்திகளை வழங்கும் பக்கம் ட்விட்டரில் பதிவிட்டது. ஆனால், இதே பிரச்சினை மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது.
இப்படி போன் செயலிழந்து போவதற்கு முக்கியக் காரணம் அந்தப் புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் COLOR PROFILE தான். இந்தப் புகைப்படம் கூகுளின் SKIA RGB ப்ரோஃபைலைப் பயன்படுத்துகிறது.WARNING!!!— Ice universe (@UniverseIce) May 31, 2020
Never set this picture as wallpaper, especially for Samsung mobile phone users!
It will cause your phone to crash!
Don't try it!
If someone sends you this picture, please ignore it. pic.twitter.com/rVbozJdhkL
இதுபற்றி 9to5Google என்ற பிரபல இணையதளத்தைச் சேர்ந்த டைய்லான் ரவுசல் கூறுகையில் “இந்த Wallpaperரானது ஆண்ட்ராய்டு 11 யைப் பயன்படுத்தும் போன்களில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவற்றில் தானாகவே இந்தப் புகைப்படத்தின் color profile sRGB (Standard Red Green Blue) வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிடுகின்றன.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குக் கீழான ஆண்ட்ராய்டு வெர்ஷன்களைப் பயன்படுத்தும் போன்கள் இதைச் செய்வது இல்லை. இதனால்தான் அவை அந்தப் புகைப்படத்தை லோட் செய்ய முடியாமல் Crash ஆகி போன்கள் செயலிழந்து போகின்றன” என்றார்.
இப்படி பிரச்சினைகளை இருந்தும், இந்த Wallpaperரைக் கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அந்தப் புகைப்படத்தை sRGB கலர் ப்ரோஃபைலுக்கு மாற்றி விட்டுப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யாமல் இதை Wallpaperராக்கினால் உங்கள் போனும் கிராஷ் ஆகும். பின்பு மொத்தமாக போனை RESET தான் செய்ய வேண்டும்.
சமீபகாலமாக இந்தப் புகைப்படம் இணையத்தில் அனைவரிடமும் வலம் வந்த வண்ணம் உள்ளது. இதைத் தெரியாமல் பயன்படுத்தி பிரச்சினையில் சிக்கிக்கொண்டவர்கள் பலர். சிலர் ‘அதெப்படி ஒரு போட்டோவால் போன் கிராஷ் ஆகும்?’ என முயற்சி செய்து அவதிப்பட்டிருக்கிறார்கள். அதனால் கவனமாக இருப்பது நல்லது!
Source: https://www.androidpolice.com/2020/06/04/choosing-the-wrong-wallpaper-can-bootloop-your-android-phone/