நாம் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்க மாட்டோம் - நிந்தவூர் அஸ்ரப் தாஹீர்

நாம் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்க மாட்டோம் - நிந்தவூர் அஸ்ரப் தாஹீர்

முஸ்லிம் காங்கிரஸிக்கு மக்கள் வாக்களிக்க தயாரில்லை என அம்பாறை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்வேட்பாளரும், நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளருமான எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹீர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நம்ப தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அம்பாறைமாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளர்எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹீர் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். அவரை ஆதரித்து நேற்றிரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில், சுயநல மூலம்தெரிவானவர்கள் இன்று பிரதேசவாதத்தை ஊட்டி வளர்க்க முற்படுகின்றார்கள்.


எமது பிரதேச வாதம் தான் எமது பிரச்சினை வளர்வதற்கு காரணமாகும். மூன்று தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அதேவேட்பாளர்களை களமிறக்கி வெற்றி பெறச் செய்து வருகின்றது. அவ்வாறு வென்றவர்கள் இதுவரை எதனை செய்தார்கள் என மக்கள்உணர வேண்டும். இவ்வாறு உணரும் பட்சத்தில் இவர்களுக்கான பதிலை இந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் வழங்குவார்கள்.

கடந்த காலங்களில் இவ்வாறானவர்கள் பதவிகளில் இருந்த போதிலும் மக்களை சந்திக்காததன் விளைவினால் இரவு பகலாக இன்றுபுலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். எனினும் மக்கள் இம்முறை முஸ்லிம் காங்கிரஸிக்கு வாக்களிக்க தயாரில்லை என்பதை அவர்கள்புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நாம் உட்பட மக்கள் எவரும்நம்ப தயாரில்லை என்பதாகும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post