அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் இரட்டிப்பு மடங்காக பரவல்!

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் இரட்டிப்பு மடங்காக பரவல்!

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று நோய்க்கு அடுத்த படியாக டெங்கு மற்றும் எலிக்காய்சல் நோய் தற்போது தீவிரமாக பரவிவருகின்றன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் வழிகாட்டலுக்கு அமைய விசேட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரைக்குமான எமது சுகாதார சேவைப்பிரிவில் கடந்த ஆண்டிலும் பார்க்க தற்போது டெங்கு நோயானது தீவிரமாக பரவி வருகின்றன. சில உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

மலேரியா நோயை பொறுத்தவரையில் இந்த நோயை பரப்பும் நுளம்பு இந்தியாவில் தான் உள்ளது. வடக்கில் இதன் தாக்கம் உள்ளது. தற்போது அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் இந்த வகை நுளம்புகள் உள்ளன. இதனை ஒழிப்பதற்கு மூன்று விசேட வைத்திய குழு அந்தப் பகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

எலிக்காய்சல் பற்றிய விழிப்புணர்வையையம் பொதுமக்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் எமது சுகாதாரப் பிரிவில் கடந்த ஆண்டில் 23 பேர் இன்நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 02 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர். இன்நோயானது வயல் நிலங்களில் காணப்படும் நீர் நிலைகளில் எலிகள் விடும் சிறுநீர் எச்சங்கள் பின்னர் அந்த நீர் நிலைகளில் இறங்குபவர்களின் கால், கைகளில் உள்ள காயங்கள், கண், வாய் போன்ற உறுப்புக்கள் ஊடாக உடலுக்குள் சென்று நோய்தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சுகாதாரப்பிரிவினரின் அறிவுறுத்தல்களை பன்பற்றி நடந்து கொண்டால் கூடிய விரைவில் இந்த நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post