பாடசாலைகளுக்கு இவ்வருட ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படுமா??

பாடசாலைகளுக்கு இவ்வருட ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படுமா??

School sri lanka students
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் வழமையாக வழங்கப்படும் விடுமுறை செப்டம்பர் மாதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 04 ஆம் திகதிவரை நடைபெறும்.

மூன்றாம் தவணை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாம் தவணை விடுமுறை செப்டம்பர் 05ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 04ஆம் திகதி வரை நீடிக்கும்.

இக்காலப்பகுதியிலேயே கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்றாம் தவணை விடுமுறை வழமை போன்று நவம்பர் 27 ஆரம்பமாகி 2021 ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post