ரத்மலான, சொய்சாபுர பிரதேச ஹோட்டல் ஒன்றுக்கு மோட்டார் வாகனமொன்றில் வந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி ஹோட்டல் உரிமையாளருக்கு மரண அச்சுறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தமை தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் நேற்று (02) மாலை சந்தேகத்தின் அடிப்படையில் 26 மற்றும் 36 வயதுகளைடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.