நாமலின் கூற்று மகிழ்ச்சியளிக்கின்றது! ஹிருனிகா பிரேமசந்திர

நாமலின் கூற்று மகிழ்ச்சியளிக்கின்றது! ஹிருனிகா பிரேமசந்திர

கல்கிசை கடற்கரை திட்டம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கூற்று தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஷ இது குறித்து சரியான நிலைப்பாட்டை எடுத்தது மகிழச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்கிசை கடற்கரையில் கொட்டப்பட்ட மணல் முழுமையாக அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்தை நாமல் ராஜபக்ஷ நிதிக்குற்றச்சாட்டு எனவும், அது தொடர்பில் விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாமல் ராஜபக்ஷவின் செயற்பாடு குறித்து எதிர்க்கட்சி என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்திருக்க வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை நடத்துமாறு அவரிடம் கோரியிருக்க வேண்டும் எனவும் ஹிருனிகா கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் கூறியிருக்கும் கருத்து தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post