இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை; குணமடைந்தோரில் முன்னேற்றம்!

இன்று (12) இதுவரையான காலப்பகுதிக்குள் (7.30 PM) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொவிட்19 தொற்றுக்குள்ளான மேலும் 7 கடற்படையினர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட்19 தொற்றுக்குள்ளாகி முற்றாக குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர்ந்து, கொரோனா தொற்றுக்குள்ளான 8 கடற்படையினர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 1,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியான 1,196 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 670 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post