முகக் கவசம் அணிவது கட்டாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முகக் கவசம் அணிவது கட்டாயம்!

சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைசசர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சகல பஸ் களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸகளை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.