ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் தாறுமாறான தாக்குதல்! -நாமல் கண்டனம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் தாறுமாறான தாக்குதல்! -நாமல் கண்டனம்

rajapaksha
கொழும்பில் நேற்று (09) அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவல் துறையினர் தாறுமாறாக தாக்குதலை மேற்கொண்டமை குறித்து விசாரணைகள் இடம் பெறவேண்டும் என நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ இந்த தாக்குதலை தான் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையை சேர்ந்த இதுபோன்ற சிலரின் சமீபத்திய நடவடிக்கைகளினால் பொலிஸ் திணைக்களத்திற்கு களங்கம் ஏற்படலாம் என தெரிவித்துள்ள அவர், 'நான் பொலிஸாரின் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதுடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post