
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடி விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம் இன்று ( 22 ) தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் பதிலை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் ஒழிவு மறைவுக்கு ஒன்றுமில்லை கடந்தகாலத்தில் நடந்த கொடிய யுத்தத்தைப் பற்றிதான் நான் பேசினேன். அதை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்து ஒரு மாற்றத்தை உருவாக்கியதை தான் பிரச்சாரத்தின்போதுஅறிவித்தேன் இதை அரசியல் இலாபமடைகின்றனர். சிலர் பூதாகரமாக்கி குறிப்பாக சஜித் பிரேமதாச கடும் முயற்சிகளை எடுத்து பூதாகரமாக்கியுள்ளார்.
உண்மையில் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்னை பொறுத்தளவில் இந்தியபடை வெளியேறிய காலத்தில் இந்தியபடையை அழிக்க இவரின் தந்தையாரும் இவரும் துப்பாக்கி ரவைகள் ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். அனுராகுமார திஸநாயக்க இதைப்பற்றி பேச அருகதையற்றவர். அவர்கள் தங்கள் சொந்த மக்கள் 80 ஆயிரம் பேரை கொலை செய்தவர்கள். எனவே கடந்தகால யுத்தத்தைப்பற்றி கதைத்தேனே ஒழிய தவறாக கதைக்கவில்லை என்றார்.