ஶ்ரீலங்கன் விமான சேவை மூடப்படுமா? இழப்பு மட்டும் பல பில்லியன் அமேரிக்க டொலர்கள்!

ஶ்ரீலங்கன் விமான சேவை மூடப்படுமா? இழப்பு மட்டும் பல பில்லியன் அமேரிக்க டொலர்கள்!

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியிருப்பதாகவும் இந்த கடனில்பெருந்தொகை அரசுக்கே செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் அசோக் பதிரகே தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கிக்கு 220 மில்லியன் டொலர்களும், மக்கள் வங்கிக்கு 187 மில்லியன் டொலர்களும், வரையறுக்கப்பட்ட இலங்கைவணிக கூட்டுத்தாபனத்திற்கு 275 மில்லியன் டொலர்களையும் கடனாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார் . நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை தாம் உட்பட பணிப்பாளர் சபையினருக்கு ஒரு வருடத்தில்இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற முடியும் என எண்ணியதாகவும் கொரோனாவைரஸ் அதற்கு தடையாக அமைந்ததாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 130 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது. கொரோனா காரணமாக விமானநிலயம் மூடப்பட்டதால் , தமது நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் பதிரகே சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுநாயக்கபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மூடப்பட்டதுடன் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்முதலாம் திகதி திறக்கப்பட உள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post