"நான் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பை தடுக்கும் முயற்சியாகவே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது." மைத்திரி உறுதி

"நான் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பை தடுக்கும் முயற்சியாகவே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது." மைத்திரி உறுதி

நான் எனது ஆட்சியில் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தை முடக்கவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரங்கொட தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு 
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது ஆட்சிக்காலத்திலேயே போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் வலுவாக இடம்பெற்றனவெனவும்,

மேலும் போதைப்பொருள் வினியோகத்தை முற்றாக தடுப்பதற்காகவே மரண தண்டனையை அமுல்படுத்த முன்வந்திருந்ததாகவும், போதைப்பொருள் வியாபாரிகளே அதற்கு எதிராக நீதிமன்றம்​ சென்றிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டினார். 

அவ்வாறான சூழ்நிலைக்கு முகம்கொடுத்த முதலாவது ஜனாதிபதியாக  தானே உள்ளதாக தெரிவித்த அவர்,  மாகந்துரே மதூஷ் போன்ற பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்தமையால் தன்னை கொலைச் செய்வதற்கான பாதாள குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அன்றுபோலவே இன்றும் தொடர்கிறது என்றார்.

அத்தோடு, தான் பொலன்னறுவையை மீள உயிர்ப்பித்துள்ளதாகவும், அங்குள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க தனக்கான அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டுமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post