இன்று இரவு இலங்கையில் தென்படவிருக்கும் சந்திர கிரகணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இரவு இலங்கையில் தென்படவிருக்கும் சந்திர கிரகணம்!

இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அதிகாலை 02.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடமபெறும் என்றும் அவர் கூறினார்.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும். வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இலங்கையில் இதனை முழுமையாக காண முடியும்.

அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.