கஞ்சிபானை இம்ரானிடமிருந்து தொலைபேசிகள் மீட்பு!!

கஞ்சிபானை இம்ரானிடமிருந்து தொலைபேசிகள் மீட்பு!!

பாதாள உலகத்  தலைவன் கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலி, பூசா சிறைச்சாலையின் கூடத்திலிருந்து இரு தொலைபேசிகள் உள்ளிட்டவை மீட்கப்ப்ட்டுள்ளன. 

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவியுடன் நடாத்தப்பட்ட விஷேட தேடுதலின் போதே  இவை மீட்கப்பட்டுள்ளன.


சிறைக்கூடத்தில் மிகவும் சூட்சுமமாக இந்த இரு தொலைபேசிகளும் மறைந்து வைக்கப்பட்டிருந்துள்ளன.

ஒரு தொலைபேசி ஸ்மார்ட் தொலைபேசி எனவும் மற்றையது  சாதாரண தொலைபேசி எனவும் தெரிவித்த  பொலிஸ் விஷேட அதிரடிப் படை, இரு SIM அட்டைகள், Charger, Handsfree ஆகியனவும் மீட்கப்பட்டதாக தெரிவித்தது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post