அமெரிக்கா: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வலியுறுத்தல்!!!

அமெரிக்கா: ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோர் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வலியுறுத்தல்!!!

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபுளோய்ட் மரணம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோர், COVID-19 நோய்த் தொற்றுப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே போஸ்டன் (Boston), டாலஸ் (Dallas) ஆகிய நகர நிர்வாகங்களும் நியூயார்க் மாநில நிர்வாகமும் அத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளன.

கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் சுமார் 112,000 பேர் மாண்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

அவர்கள் அனைவரும் 14 நாள்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கவேண்டும்; சாத்தியமானால் வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாஷிங்டனில் இலவசமாகக் கிருமித்தொற்றுச் சோதனை செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை நேரங்களிலும் வார இறுதியிலும் தீயணைப்பு நிலையங்களிலும் அத்தகைய இலவசச் சேவை வழங்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post