ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இலிருந்து அரசாங்கத்திற்குள் தாவும் வேட்பாளர்கள் - இன்றும் ஒருவர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இலிருந்து அரசாங்கத்திற்குள் தாவும் வேட்பாளர்கள் - இன்றும் ஒருவர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இல் காலி மாவட்டத்தில் போட்டியிட இருந்த முன்னாள் இராணுவத் தளபதி தெனத் பனியந்தூவகே 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இற்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்தார்.

போட்டியிடுவதிலிருந்து விலகி கொழும்பில் இருக்கும் பிரதமர் இல்லத்தில் இன்று பிரதமரினை சந்தித்துள்ளார்.


இது SJB கட்சியின் இரண்டாவது நபர் இவ்வாறு விலகியுள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீரவும் தாம்போட்டியிடவில்லை என அறிவித்திருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post