890 மில்லியன் செயற்கைக் கடற்கரை கடலுக்கு இரையானது!

890 மில்லியன் செயற்கைக் கடற்கரை கடலுக்கு இரையானது!

890 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கடற்கரையின் பகுதி கடல் நீரில் கரைந்துள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மக்கள் பணம் வீணாகக் கரைந்து போயுள்ளதாக விசனம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இந்த 'இழப்பு' எதிர்பார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

களுத்துறை, ரத்மலான மற்றும் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதிகளில் இவ்வாறு 890 மில்லியன் ரூபா செலவில் செயற்கைக் கரையோரப் பகுதி உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்கள் பணம் விரயமாகியுள்ளதாக ஹர்ஷ அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post