அந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திடுவதைத் தடுக்க எம் கட்சி உயிரை விட தயாராகவுள்ளது! -அனுர குமார

anura-kumara-dissanayake
அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் (MCC) ஒப்பந்தத்தில் கைசாத்தல் விடயம் தொடர்பாக அரசாங்கம் இரகசியமாக இருப்பதாக என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே MCC ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திடப்படும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து அரசாங்கமும் அமெரிக்காவும் புரிந்து செயற்படுவது மிகத் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், மே மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தடுக்க எங்கள் கட்சி தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் என மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post