ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம் 2020 - 2021 ஆம் ஆண்டுகளுக்கான புதிய மாணவர்கள் அனுமதி தொடர்பான அறிவித்தல்!

ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம் 2020 - 2021 ஆம் ஆண்டுகளுக்கான புதிய மாணவர்கள் அனுமதி தொடர்பான அறிவித்தல்!

ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

கண்ணியத்திற்குறிய கல்லூரி அதிபர்மார்களுக்கு,

எங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்,

மர்கஸ் உபை இப்னு கஃப் எனும் பெயரில் இயங்கும் (ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம்) அல்குர்ஆன் உயர்கற்கை நெறிக்கான எமது நிறுவனம் 2020 - 2021 இற்கான புதிய மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளதை தாங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

எனவே உங்களது கல்லூரியில் தகுதியுடைய மாணவர்களை ஆர்வமூட்டி, எமது நிறுவனத்தில் இணைய விரும்பும் மாணவர்களை பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. முழுப்பெயர் -
2. கல்லூரி -
3. பட்டமளிப்புச் சான்றிதழ்
4. ஹிப்ழு சான்றிதழ் அல்லது அதற்கு சமமானது
5. தொலைபேசி இலக்கம் -

மேற்கூறிய தகவல்களை ஆங்கிலத்தில் பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

+94773760591

நேர்முகப்பரீட்சை, எழுத்துப்பரீட்சை, நுழைவுத்திகதி மற்றும் நுழைவுத்தகமைகள் தொடர்பான விடயங்கள் கொவிட் 19 நோயினால் சீரற்றிருக்கும் நிலைமைகள் வழமைக்கு திரும்பிய பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு : எமக்கு அனுப்பிவைக்கப்படும் தகவல்களைப்பெற்று உறுதிப்படுத்தி
விண்ணப்பதாரர்களுக்கு பதில் வழங்கப்பட்டாலே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கணிக்கப்படும்..
விண்ணப்ப முடிவுத்திகதி 30/06/2020.

வல்லவன் அல்லாஹ்வை எம்மனைவரின் நற்காரியங்களை பொருந்திகொள்ளவும், இந்த நோயிலிருந்து பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம்!

இப்படிக்கு,
கல்லூரி முதல்வர்
அஷ்ஷெய்க் முஹம்மத் செளமி கரீம் (ரஷாதி)

தகவல்: அப்துல்லாஹ் பஸ்லூன்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post