‘வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்’ - அமேரிக்க அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

‘வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவேன்’ - அமேரிக்க அதிபர்

வாஷிங்­டன்: அமெ­ரிக்க மாநி­லங்­க­ளின் ஆளு­நர்­களும் மேயர்­களும் நிலை­மையை கட்­டுக்­குள் கொண்டு வரத் தவ­றி­னால், வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்த ராணு­வத்தை அனுப்­பு­வ­தாக அதி­பர் டிரம்ப் மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் மின­சொட்டா மாநி­லத்­தில் கடந்த மாதம் 26ஆம் தேதி கறுப்­பின ஆட­வ­ரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்­ப­வர் போலிஸ் ஒரு­வ­ரால் முட்­டி­யால் மிதித்­துக் கொல்­லப்­பட்­டார்.

இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வில் கடந்த ஒரு வார­மாக மக்­கள் போராட்­டங்­க­ளி­லும் வன்­மு­றை­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இத­னால் பல்­வேறு நக­ரங்­களில் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

பல ஆண்­டு­க­ளாக அடக்­கு­மு­றையை சந்­தித்து வரு­வ­தால் நிற­வெ­றிக்கு எதி­ரான இந்த போராட்­டம் வலு­வ­டைந்து வரு­கிறது.

பல இடங்­களில் கல­வ­ரம், வன்­முறை, தீவைப்பு, பொருட்­கள் சூறை என நீண்டு கொண்டே செல்­லும் நிலை­யில், அதி­பர் டிரம்ப் போராட்­டக்­கா­ரர்­கள் அத்துமீறு­வதை தம்­மால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது என கோபத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

மேலும் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி போராட்­டக்­கா­ரர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆளு­நர்­க­ளுக்கு டிரம்ப் அறி­வு­றுத்­தி­னார்.

"ஆளு­நர்­கள் அமை­தி­யைக் கொண்­டு­வ­ரா­விட்­டால், அமெ­ரிக்க நக­ரங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கில் ராணு­வத்தை இறக்­கி­வி­டு­வேன்,” என டிரம்ப் மிரட்­டும் தொனி­யில் கூறி­யுள்­ளார்.

இவ்­வாறு பேசிய டிரம்­புக்கு ஹூஸ்­டன் காவல்­து­றை தலை­வர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

அவர் சிஎன்­என் தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில், "இந்த நாட்­டின் உயர் போலிஸ் அதி­கா­ரி­யா­கக் கேட்­டுக் கொள்­கி­றேன் அதி­பர் ஆக்­க­பூர்­வ­மாக எது­வும் செய்ய முடி­யா­விட்­டால் வாயை மூடிக்­கொண்டு இருக்­க­வும்.

"இப்­போது ஆதிக்­கம் செலுத்தி வெற்­றி­பெ­றும் காலம் அல்ல, இது மக்­கள் இத­யங்­க­ளை­யும் மனங்­க­ளை­யும் வென்­றெ­டுக்க வேண்­டிய காலம்," என்­றார்.

இதற்­கி­டையே, சுமார் 200 முதல் 250 ராணுவ வீரர்­கள் வாஷிங்­டன் நகர வீதி­களில் இன்று காலைக்குள் நிறுத்­தப்படு­வர் என்று கூறப்­ப­டு­கிறது. அவர்­கள் பாது­காப்பு பணி­யில் மட்­டுமே ஈடு­ப­டு­வார்­கள் என்­றும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கைது செய்­யவோ, சட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளிலோ ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்று எதிர்­பார்க்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.